×

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து 4 வயது மகனுடன் கொரோனா நோயாளி தப்பியோட்டம்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து 4 வயது மகனுடன் கொரோனா நோயாளி தப்பியோடியுள்ளார். லால்குடியை சேர்ந்த தந்தை, மகன் 2 பேருக்கும் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய தந்தை, 4 வயது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியில் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் ஜூலை 20 முதல் செயல்பட தொடங்கும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சியில் இதுவரை 1814 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1020 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 767 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருச்சியில் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.Tags : patient ,Corona ,Trichy Government Medical College Hospital ,Trichy , Trichy, Government Medical College Hospital, Corona
× RELATED சென்னை வியாசர்பாடியில் கொரோனா...