×

சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கிய விவகாரம் : இந்தியாவுடன் ஒப்பந்தத்தை நாங்கள் போடவே இல்லை என ஈரான் அதிரடி டிவிஸ்ட்

தெஹ்ரான்: இந்தியாவுடன் சாபஹார் ரயில் பாதை ஒப்பந்தத்தை நாங்கள் போடவேயில்லை என்று ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தியில்,     ஈரானில் இருக்கும் சாபஹார் துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டது. ஆனால் இந்திய தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால், இந்தத் திட்டத்தை ஈரானே நிறைவேற்றிக் கொள்ள உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை ஈரான் நீக்கியது என்ற செய்தி முற்றிலும் தவறானது என்றும் சகேதான்-சாபஹார் ரயில்வே தொடர்பாக இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்றும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் துணைத் தலைவர் ஃபர்ஹாத் மோன்டேசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,  ஈரான் நாட்டின், சாபஹாரில் முதலீடு செய்வதற்காக இந்தியாவுடன், இரண்டு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளது ஈரான். அதில் ஒன்று துறைமுகத்தின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் தொடர்புடையது, இரண்டாவதாக, அந்த துறைமுகத்தில், இந்தியாவின் 150 மில்லியன் டாலர் வரையிலான தொடர்புடையது. சாபஹார் துறைமுகத்தில் இந்தியா செய்ய விரும்பிய முதலீடுகளின் பட்டியலில் சாபஹார் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்பு ஆகியவை இருந்தன. ஆனால் பேச்சுவார்த்தைகளின் போது அது ஒப்புக்கொள்ளப்படவில்லை. பொருளாதாரத் தடைகளுக்கும், சாபஹரில் ஈரான்-இந்தியாவின் முதலீடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Iran ,India ,Sabah , Sabahar, Rail, Project, India, Agreement, Iran, Action, Twist
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...