×

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இதுவரை 43 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி: ஆட்சியர் தகவல்

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இதுவரை 43 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சியில் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் ஜூலை 20 முதல் செயல்பட தொடங்கும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இதுவரை 1814 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1020 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 767 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மதுரை, விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில்  கொரோனா தொடர்ந்து அதிகரிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். மதுரை, விருதுநகரில் நாள் ஒன்றுக்கு 5,000 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.Tags : Corona ,Trichy Corporation ,Trichy , Trichy, Corona
× RELATED கோயம்பேடு சந்தை பணியாளர்களுக்கு 15...