×

சின்னாளபட்டி 16வது வார்டில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு

சின்னாளபட்டி:சின்னாளபட்டி 16வது வார்டில் கழிவுநீர் வாய்க்கால் பொக்லைன் இயந்திரம் கொண்டு சீரமைக்கப்பட்டது. சாக்கடை கழிவுநீர் செக்காபட்டி பகுதியில் தேங்கியது அகற்றப்பட்டது. சின்னாளபட்டியில் 7,8,9,10,11,14,17,18வது வார்டு பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செக்காபட்டி வழியாக வந்து சிக்கனம்பட்டி அருகே உள்ள குரும்பன் குளத்தை வந்தடைகிறது. சாக்கடை கழிவுநீரை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு பாய்ச்ச பேரூராட்சியில் வருட குத்தகைக்கு எடுத்து நீர்ப்பாய்ச்சி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக செக்காபட்டி அருகே கழிவுநீர் தேங்கி அருகே உள்ள குளத்த்திற்கு சென்றது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்திக்கூடமாக மாறியது. பொதுமக்கள் புகார் செய்ததையடுத்து பேரூராட்சி நிர்வாகம் தேங்கியிருந்த கழிவுநீரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி குரும்பன் குளத்திற்கு கழிவுநீர் செல்ல வாய்க்காலை தூர்வாரியது. இதனால் தேங்கியிருந்த கழிவுநீர் குரும்பன்குளத்திற்கு சென்றது. கழிவுநீரை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

Tags : Chinnalapatti ,16th Ward , Chinnalapatti, sewerage, rehabilitation
× RELATED குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு