×

தங்கம்மாள்புரம் ஊராட்சியில் குடிநீர் உறை கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம்

மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரம் மூல வைகை ஆற்றில் உறைகிணறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

வருசநாடு: தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய மூல வைகை ஆற்றில் போடப்பட்ட குடிநீர் உறைகிணறுகளை தூர்வாரும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தங்கம்மாள்புரம் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பாறை, ஆத்துக்காடு, பாம்பாடும்பாறைபுதூர், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு மூல வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்கிறது. தற்போது இந்த பகுதியில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு பாலைவனமாக கிடக்கிறது.

இதனால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து தற்போது பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறை கிணறுகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ராமுத்தாய் ராஜா. ஊராட்சி மன்ற துணை தலைவர் மலைச்சாமி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : drinking water wells ,drilling , Thangammalpuram panchayat, drinking water wells, dredging work
× RELATED 720 தெருக்களின் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி