×

கொரோனா பாதித்து குணமானவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடக அரசு சூப்பர் அறிவிப்பு!

பெங்களூரு: கொரோனா பாதித்து குணமானவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றை குணப்படுத்த இதுவரை தனியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கொரோனா நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்கு நல்ல பலன் இருந்தாலும், இதைவிட பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை தந்து வருவது மருத்துவரீதியாக நிரூபணமாகி வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா தானம் தரும் நபர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கர்நாடகா மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இதனால் பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவர்கள் தாமாக முன் வருவார்கள் என  நம்பிக்கை உள்ளது.

வீடு வீடாகச் சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து காய்ச்சல் மற்றும் அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. கொரோனா நொலையாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. குடிசைப் பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அரசு மையங்களில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அடுத்த 10 முதல் 15 நாள்களுக்கு ஒவ்வொரு பரிசோதனைக் கூடங்களும் ஆயிரத்துக்கும் குறையாமல் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 58 மருத்துவக் கல்லூரிகளில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


Tags : govt ,corona sufferers ,Karnataka ,COVID-19 , Corona, Plasma, Donation, Incentive, Government of Karnataka
× RELATED திருவண்ணாமலையில் நடந்த சாலை...