×

கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.டி. இயக்குனர் அருண் பாலசந்திரன் பதவிநீக்கம்!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனை தொடர்ந்து, ஐ.டி. இயக்குனர் ஒருவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள் சிலரும் ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது விசாரணையில் அம்பலாகியிருக்கிறது. கேரளாவை உருக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வழக்கை பொறுத்தவரையில் சுங்கத்துறையினர் தனியாக விசாரணை நடத்துகின்றனர்.

அதேபோன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளை பொறுத்தவரையில் அவர்கள் தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா மற்றும் சந்திப் நாயரை கைது செய்தது மட்டுமில்லாமல் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் சுங்கத்துறை அதிகாரிகள், ஸ்வப்னாவின் கூட்டாளியான சரித்தை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று மூன்று பேரை கைது செய்த அவர்கள், இன்று புதிதாக சைதலவி, முகமது அன்வர் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர்.

அதுதவிர முகமது சலால் என்பவரும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சரணடைந்திருக்கிறார். அவர்களும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் தான் கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் சுங்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையில் தங்கக்கடத்தல் விவகாரம் கேரளாவில் புயலை கிளப்பி வருவதில்லாமல் மூத்த அதிகாரிகள் பலருடைய பதவிநீக்கத்திற்கும் காரணமாகிவிட்டது. ஏற்கனவே முதல்வரின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கரன் நீக்கப்பட்டு, ஐ.டி. செயலாளர் பதவியில் இருந்தும் ஓராண்டுக்கு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் தான் அடுத்த அதிரடி திருப்பமாக கேரளா ஐ.டி. பார்க் இயக்குனர் அருண் பாலசந்திரனும் நேற்று இரவு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கடத்தல் கும்பலுக்கு ஓட்டலில் அறை பதிவு செய்தவர் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்மை பதவிநீக்கம் செய்யப்பட்டது குறித்து அதிகாரி அருண் பாலசந்திரனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அதிகாரி சிவசங்கரன் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் தாம் ஓட்டலில் அறை பதிவு செய்ததாக கூறிவருகிறார். எனவே அதிகாரி சிவசங்கரனுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் வலுத்து வருகிறது. தொடர்ந்து தங்கக்கடத்தல் வழக்கில் பதவி இழக்கும் ஐ.டி. துறையின் 3வது அதிகாரி அருண் பாலசந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Arun Balachandran ,Kerala , Gold smuggling case in Kerala Director Arun Balachandran sacked
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...