×

இந்தியாவை போல் அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுங்கள் : அதிபர் டிரம்பிற்கு 25 எம்.பி.க்கள் கடிதம்!!

நியூயார்க்: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்த இந்தியாவுக்கு அமெரிக்க எம்பி.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்று, அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு என கடும் நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டுவரும் சூழலில், மே மாதம் இந்திய லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில வாரங்களாக அங்கு பதற்றம் நீடித்துவந்த நிலையில், ஜூன் 15-ம் தேதி இந்திய ராணுவத்தினர் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு இந்தியா - சீனா இடையே போர்ச் சூழலை ஏற்படுத்தியது.

இச்சூழ்நிலையில்தான் கடந்த ஜுன் 29-ம் தேதி டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம்ஸ்கேனர், வீ-சேட் உட்பட 59 சீனா செயலிகளுக்கு தடைவிதித்தது மத்திய அரசு. இந்தத் தடைக்கு சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு நேரடிக் காரணமாகக் கூறப்படவில்லை. மாறாக இந்தச் செயலிகள் இந்தியப் பயனாளிகளின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்திவருவதால் நாட்டின் பாதுகாப்பு கருதி அவற்றை தடைசெய்கிறோம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனாலும், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது வெளிப்படையானது.

இந்த நிலையில், அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு குடியரசு கட்சியைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள் அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தியாவை போல் அமெரிக்காவிலும் சீன செயலிகளுக்கு தடைவிதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க மக்களை செயலிகள் மூலம் சீன உளவு பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.


Tags : Trump ,United States ,Chinese ,MPs ,India , India, United States, Tic Tac Toe, 59 Chinese Processors, Ban, President Trump, 25 MPs, Letter
× RELATED நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி...