×

ஈரோட்டில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள்...! பவானி கூடுதுறையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை!!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் கூடுதுறையில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், காவிரி ஆறு களையிழந்து காணப்படுகிறது. மேலும், ஊரடங்கால் பக்தர்களை சங்கமேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளதால், ஆலயத்திற்கு வெளியில் நின்று வழிபட்டு செல்கின்றனர். இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனுமதி இல்லாததால், பவானி சங்கமேஸ்வரர் கோவிலும், பவானி கூடுதுறையும் வெறிசோடி காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். அதேபோன்று, இந்த பகுதியில் காவிரி ஆறும், பவானி நதியும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதியும் கூடுவதாக ஐதீகம் ஒன்று உள்ளது. இந்த கூடுதுறையில் வழக்கமாக ஆண்டுதோறும் ஆடி ஒன்றாம் தேதி ஏராளமாக பக்தர்கள் வருவது வழக்கமான ஒன்று. இதனைப்போன்று, புதுமண தம்பதிகள் இந்த பகுதிக்கு வந்து காவிரியில் புனித நீராடி, படித்துறையில் படையலிட்டு, சாமிக்கு பூஜை செய்வதும், மாலைகளை மாற்றி கொண்டு சங்கமேஸ்வரரை வழிபடுவதும் வழக்கமாகும்.

ஆனால் இந்த ஆண்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் பவானி கூடுதுறைக்கும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.  அதாவது முழுவதும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பு பகுதிகளுக்கு முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால், புதுமண தம்பதிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Tags : temples ,Erode ,Corona ,Devotees ,Bhavani ,complex , Corona closed temples in Erode ...! Devotees banned from bathing in Bhavani complex
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...