×

ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 75 லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பல்!!

வாஷிங்டன்: பிட்காயின் எனப்படும் கண்ணுக்கு தெரியாத கரன்சியின் பெயரில் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான் ஜெஃப் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இணைய ஊடுருவிகள் ஊடுருவினர். இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவிய ஹேக்கர்கள் பிட்காயின் மூலம் நன்கொடை அனுப்பினால் அரை மணி நேரத்தில் அந்த தொகையை இரட்டிப்பாக அனுப்புவோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதனை நம்பி சில நிமிடங்களில் இந்திய ரூபாயில் மொத்தம் 75 லட்சம் ரூபாய் அளவுக்கான நன்கொடை தொகையை பலர் செலுத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த ஊடுருவலை கண்டறிந்த ட்விட்டர் நிறுவனம், பாஸ்வர்டு எனப்படும் கடவுச் சொற்களை மாற்றி அமைக்கும் வசதியை உடனே நிறுத்திவிட்டது. இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.

Tags : World leaders ,gang ,Bill Gates ,Obama , Obama, Bill Gates, world leaders, Twitter, accounts
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...