×

சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல் வாங்குகிறது பாக்.

புதுடெல்லி: இந்தியாவுக்கு சவால் விடுக்கும் வகையில், தனது கடற்படையை பலப்படுத்த சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தான் வாங்குகிறது. இந்தியா - சீனா எல்லை பிரச்னை ஒருபுறம் பேச்சுவார்த்தையில் சென்றுக் கொண்டு இருக்க, மறுபுறம் பாகிஸ்தான் தனது கடற்படையை பலப்படுத்த சீனாவிடம் 700 கோடி அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, சீனாவிடம் இருந்து 8 ‘யுவான்’ ரக டீசல் எலக்டிரிக் நீர்மூழ்கி கப்பல்கள், 4 பீரங்கி கப்பல்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் வாங்குகிறது. யுவான் ரக நீர்மூழ்கி கப்பல் உலகிலேயே அதிவேகமாக செல்லக்கூடியவை. இதில், 4 நீர்மூழ்கி கப்பல்கள் 2022-2023ல் வழங்கப்பட உள்ளது. மற்ற 4 கப்பல்கள் கராச்சியில் கட்டப்படுகிறது.

பாகிஸ்தான் வாங்கும் பீரங்கி கப்பல் மிகவும் நவீனமானவை. 4,000 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பலில் தரையில் இருந்து விண்ணில் செலுத்தக்கூடிய ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் இடம் பெறுகின்றன.
மேலும், பாகிஸ்தான் தன்னிடம் இருக்கும் 5 பிரான்ஸ் தயாரிப்பு, ‘அகொஸ்டா -90பி’ ரக நீர்மூழ்கி கப்பலை துருக்கி உதவியுடன் மேம்படுத்துகிறது. மேலும், அந்நாட்டுடன் 1.5 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 4 நீர்மூழ்கி கப்பலை எதிர்க்கும்  பாதுகாப்பு  கப்பலை வாங்குகிறது.

Tags : Bach ,China Bach ,China , China, 8 submarine, buys, pak.
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன