கழிவுநீர் தொட்டி அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி 2 வாலிபர் பலி: பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமான பல  அடுக்கு குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோ வசித்து வருகின்றனர். இந்நிலையில் 147வது பிளாக்கில் வசித்து வரும் குபேந்திரன்(54) என்பவர், தான் வசிக்கும் 147 பிளாக்கில் உள்ள கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. இதனால் குபேந்திரன் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ்(35) மற்றும் சைன்ஷா(32) ஆகியோர் உதவியுடன் நேற்று மாலை கழிவு நீர் தொட்டியில் உள்ள அடைப்பை வெளியில் இருந்து சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால் அடைப்பு எடுக்க முடியவில்லை.

இதையடுத்து நாகராஜ் மற்றும் சைன்ஷா ஆகியோர் கழிவு நீர் தொட்டிற்கள் இறங்கி அடைப்பை சரி செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது உள்ள இறங்கிய சிறிது நேரத்தில்  எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி கழிவு நீர் தொட்டிற்குள் விழுந்தனர். இதை மேல் இருந்து பார்த்த குபேந்திரன் செய்வது அறியாமல் தவிர்த்து உதவிக்கு கேட்டு அலறினார். அப்போது இங்கு இருந்த மக்கள் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த இருவரையும் மீட்க பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை தொட்டியில் இருந்து மீட்க முடியவில்லை.

ஒருகட்டத்தில் சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கவச உடை அணிந்த பாதாள சுரடு மூலம் நாகராஜ் மற்றும் சைன்ஷா உடலை இறந்த நிலையில் மீட்டனர். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அழுது துடித்த சம்பவம் பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து இருவரும் செலவுக்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கழிவுநீர் தொட்டியில் உள்ள அடைப்பை சரிசெய்ய முயன்றுள்ளனர். அப்போது இந்த விபரீதம் நிகழ்வு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories:

>