ரயில் மோதி புது மாப்பிள்ளை பலி

பெரம்பூர்: பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பங்காரு தெருவைச் சேர்ந்தவர் முரளி (36). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த திவ்யா (30) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், முரளிக்கு செவித்திறன் மற்றும் வாய் பேச முடியாத குறைபாடு இருந்து வந்துள்ள நிலையில் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்காக நேற்று ஜெராக்ஸ் எடுக்க மேட்டுபாளையம் வழியாக பெரம்பூர் தண்டவாளத்தின் மீது ஏறி சென்றார். அப்போது, ஊழியர்களை அழைத்து செல்லும் மின்சார ரயில் வேகமாக வந்தது. காதுகேட்காத காரணத்தினால் வேகமாக வந்து அவர் மீது மோதி முரளி உயிரிழந்தார்.

Related Stories:

>