×

தாம்பரம் அருகே வீடுகளை இடிக்க குடியிப்புவாசிகள் எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் 11 மதகுகள் கூடிய மிகபெரிய தடுப்பணையை பொதுப்பணித் துறையினர் கட்டி வருகின்றனர். இந்த பகுதியை ஒட்டி பெரியார் நகர், பெரியார் நகர் விரிவு, ஜெயலஷ்மி நகர், பாரதமாதா நகர் என சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்நிலையில், அடையாறு ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை காரணமாக அதன் அருகே உள்ள வீடுகளை இடித்து அகற்ற பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரங்களை கொண்டுவந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்குள்ள குடியிப்புவாசிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் தாங்கள் அப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாகவும், சிறியதாக தடுப்பணை கட்டுவதாக கூறிய அதிகாரிகள் தற்போது மிகப்பெரிய அளவில் தடுப்பணையை கட்டிவருவதால் வீடுகளை காலி செய்ய கணக்கெடுக்கும் பணியை செய்துள்ளனர். எனவே அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுப்பதை கைவிடவேண்டும் என தெரிவித்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலையை செய்தனர். மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அரசு அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களை அங்கிருந்து கொண்டுசென்றனர்.

Tags : demolition ,houses ,Residents ,Siege ,Tambaram , Copper, demolition of houses, protest of settlers, officer, siege
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...