×

உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 17 பேருக்கு கொரோனா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த வாரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த மளிகை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது இதையடுத்து அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்புலிவனம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் மளிகை கடைகாரர் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மளிகை கடைகாரர் குடும்பம் உட்பட அக்கம் பக்கத்தினர் என அப்பகுதியில் மொத்தம் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவர்கள் அனைவரையும் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து திருப்புலிவனம் கிராம மக்கள் கூறுகையில் மளிகை கடைகாரருக்கு கொரோனா தொற்று உறுதியானவுடன் ஊராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வந்தனர். இதனால் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி தற்போது 17 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரிசோதனையில் செய்ததில் பலர் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : village ,Uttiramerur ,Corona , Uttiramerur, in the same village, for 17 persons, Corona
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...