×

திருப்போரூரில் ஆர்ப்பாட்டம் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு

திருக்கழுக்குன்றம்: செங்காடு கிராமத்தில் ஊருக்கு பொதுவான இடத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் பாதை அமைத்தனர். இதனால், ஏற்பட்ட மோதலை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறியும், உரிய அனுமதியின்றியும், ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் உட்பட அதிமுகவினர் 48 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : protesters ,Thiruporur , Thiruporur, demonstration, AIADMK, case registration
× RELATED திருப்போரூர் அருகே பரபரப்பு...