×

மின் கணக்கீடு விவகாரம் கட்டண நிர்ணயம் எதிர்த்த வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீதி தொகைக்கு பில் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது.  இதை எதிர்த்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் 2 மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் தொகை செலுத்த நிர்ப்பந்திக்கப்படுவதாக கூறி, அதற்கான விளக்க மனு ஒன்றை மனுதாரர் தாக்கல் செய்தார். அதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த வழக்கில். அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Tags : ECourt , E-calculation issue, fee determination, case, iCourt discount
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...