×

அரசு அதிகாரிகளை குறிவைக்கும் கொரோனா: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களாக அறிகுறி இருந்ததை அடுத்து பொன்னையாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா உறுதியானதை அடுத்து பொன்னையா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஏற்கெனவே கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து தாக்குகிறது.

மேலும் காஞ்சிபுரத்தில் கொரோனாவுக்கு அரசு அதிகாரிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,255-ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 55 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 1,932 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 2,268 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : government officials ,Corona ,Kanchipuram District Collector ,Ponnaya , Government Officer, Corona, Kanchipuram, District Collector, Ponnaya, Corona
× RELATED உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல்...