×

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி, பாஜக-வின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம்..!!

சென்னை: சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முரளிதரராவ் முன்னிலையில் வீரப்பனின் மகள் வித்யா ராணி கட்சியில் இணைந்தார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் வித்யா ராணி வழக்கறிஞராக உள்ள இவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.  சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி கடந்த பிப்ரவரி மாதம், கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது, வித்யா ராணி பாஜக-வின்  மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Vidya Rani ,Veerappan ,Santhanam ,vice president ,BJP ,state youth wing ,State Youth Team , Sandalwood abduction, Veerappan, Vidya Rani, BJP
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...