×

கொரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை, பயனாளிகள் விவரங்களை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன சிரமம்?... சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!!

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை, பயனாளிகள் விவரங்களை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் என்றும் நீதிபதிகள் வினவி உள்ளனர்.தமிழகத்தில் மட்டும் கொரோனா நிதி குறித்த விவரம் வெளியிடப்படவில்லை என்பது மனுதாரரின் குற்றச்சாட்டாகும். கொரோனா நிவாரண நிதி விவரங்களை வெளியிட கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக அரசு கொரோனா பேரிடரையொட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்த நன்கொடை விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேரிடர் காலத்தில் நிவாரண நிதியாக பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கொரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை, பயனாளிகள் விவரங்களை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

Tags : government ,Corona Relief Fund ,Chennai High Court , What is the difficulty for the government in disclosing the amount received for the Corona Relief Fund and the details of the beneficiaries? ... Chennai High Court question .. !!
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...