ஆண்களே உஷார்!: இனிக்க இனிக்க பேசி ஆண்களை வீழ்த்தும் வாட்ஸ் ஆப் காதலிகள்!.. அலங்கோல வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டல்

பெங்களூரு: சமூக வலைத்தளங்கள் மூலம் ஐ.டி. இளைஞர்களிடம் பேசி பணம் பறிக்கும் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். வாட்ஸ் ஆப்பில் பேசி காதலிப்பதாக கூறிய பெண், மற்றொருவர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதால் காதல் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் மிகுந்த பெங்களூரு மாநகரின் வைட்ஃபீல்ட் பகுதி. தனி அறையில் இருந்தே வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரிகள். பெற்றோர்களை விட்டு தனியாக வசிக்கும் இவர்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்துகிறார்கள் பெண்கள்.

கடந்த மாதம் இளைஞர் ஒருவருடன் வாட்ஸ் ஆப்பில் பேசி பழகுகிறார் ஓர் இளம்பெண். வாட்ஸ் ஆப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்கிறது. திடீரென ஒருநாள் அந்த பெண் உனது நிர்வாண வீடியோவை அனுப்பு என்றவுடன் இளைஞர் முதலில் மறுத்துவிட்டார். பின்னர் தனது நிர்வாண வீடியோவை அனுப்புவதாக அந்த பெண் கூறியதும், வீடியோ அழைப்பில் இளைஞர் நிர்வாணமாக தோன்றினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்ணின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது.

2 நாட்கள் கழித்து இளைஞரை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் நிர்வாண வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டுகிறார். அதிர்ந்து போன இளைஞர் பேரம் பேசி, தொகையை பாதியாக குறைத்து ஆன்லைனில் பணத்தையும் அனுப்பிவிட்டார். மீண்டும் அந்த நபரிடம் இருந்து போன் வந்ததால் பொறியியல் பட்டம் பெற்ற அந்த இளைஞர் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் உதவியை நாடியிருக்கிறார். போலீசார் அப்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். வாட்ஸ் ஆப் காதலி பெண்ணா அல்லது பெண் குரலில் பேசிய ஆணா என்பது போலிசாருக்கே புரியாத புதிராக இருக்கிறது.

Related Stories:

>