×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.: அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணியில் சிபிஐ தீவிரம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணியில் சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. ஜெயராஜ், பென்னிக்ஸிடம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய போது நடந்தது என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அழிந்து போன சிசிடிவி காட்சிகளை ஹார்ட் டிஸ்கில் இருந்து மீட்கும் பணியில் தொழில்நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் விசாரணைக்கு காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து  வருகிறது. சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக அறிவித்தது.

இதற்கிடையில், சிபிசிஐடியை உடனே விசாரணையை தொடங்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்பட அனைத்து ஆவணங்களையும் உடனே சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது .இந்தநிலையில் சிபிஐயிடம் அனைத்து ஆவணங்களையும்  சிபிசிஐடி  ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள்  உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீடு ,பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனை என சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸிடம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய போது பதிவான சிசிடிவி பதிவுகள் போலீசாரால் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த அழிக்கப்பட்ட  சிசிடிவி பதிவுகள் வழக்குக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதால் அதனை தொழில்நுட்ப அதிகாரிகளுடன் சிபிஐ இணைந்து ஹார்ட் டிஸ்கில் இருக்கும் பதிவுகள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : recovery ,CCTV ,CBI ,Sathankulam , Sathankulam ,murder , CBI, recovery ,destroyed, CCTV, footage
× RELATED கடத்தப்பட்ட குழந்தை மீட்பு