தமிழ்நாடு-கேரள எல்லையை இணைக்கும் சின்னார் மேம்பாலம்: மணமக்களின் தற்காலிக திருமண மேடையாக மாற்றம்!!!

சென்னை: தமிழ்நாடு-கேரள மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் தற்காலிக திருமண மேடையாக சின்னார் பாலம் மாறி வருகிறது. உடுமலை தாலுகாவில் உள்ள சின்னார் மேம்பாலம் தற்போது ஊரடங்களால் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது. கேரளாவின் மூணாறு, காந்தளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு, தமிழ்நாட்டின் உடுமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்களுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஊரடங்கால் தள்ளி போனது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு சென்று திருமணத்தை நடத்தி விடலாம் என்று பெண் வீட்டார் இ-பாஸ் விண்ணப்பித்தபோது, மணப்பெண்களுக்கு மட்டுமே இ-பாஸ் கிடைத்துள்ளது.

இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தை காண வாய்ப்பில்லை. இந்நிலையில், பெண் விட்டார் அனைவரும் கேரள எல்லையான சின்னார் பாலத்திற்கு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மணமகன் வீட்டினரும் அதே பாலத்திற்கு வந்துள்ளனர். பின்னர் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதுபோன்றே 6 திருமணங்கள் இதுவரை சின்னார் பாலத்தில் நடந்துள்ளன. அதிலும் இருவாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 திருமணங்கள் நடந்துள்ளன. இரு மாநிலங்களை மட்டுமல்ல, இரு உள்ளங்களை, இரு குடுமபங்களை இணைக்கும் பாலமாக சின்னர் மேம்பாலம் திகழ்ந்து வருகிறது.

Related Stories:

>