×

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி, சிக்கன் பிரை, முட்டை: சொந்த செலவில் மருத்துவர்கள் அசத்தல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன் கூறியதாவது: திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைக்கு நாளுக்குநாள் அதிகளவில் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கு சத்தான உணவு வழங்க முடிவு மேற்கொண்டு வாரம்தோறும் பிரியாணி, மற்றும் சிக்கன் ப்ரை உள்ளிட்ட சத்தான உணவு வழங்க முடிவு செய்தோம்.   அதன்படி, கலெக்டரிடம் அனுமதி பெற்று நேற்று முதல் பிரியாணி, சிக்கன் ப்ரை, முட்டை, சாதம், ரசம், உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி வருகிறோம். இதற்காக அரசிடம் நாங்கள் எந்த தொகையும் எதிர்பார்க்கவில்லை.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவர்களுடைய திருமண நாள், பிறந்த நாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் வந்து பணத்தை தந்து விடுகின்றனர். அதனை வைத்து நாங்களே ஆட்கள் மூலம் பிரியாணி உள்ளிட்ட சத்தான உணவுகளை சமைத்து நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம். வாரம்தோறும் நோயாளிகளுக்கு பிரியாணி வழங்கப்படும். இதேபோல்  தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்கள் யாரேனும் உதவி செய்ய விரும்பினாலும் அவர்கள் மருத்துவமனையை அணுகலாம். நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கூட்டு முயற்சியால் தற்போது நாங்கள் இதை தொடங்கி உள்ளோம். இது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
நாங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் விருந்தாளிகளை போல கவனித்து அவர்களுக்கு அனைத்து அறுசுவை உணவு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை செய்து அவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Doctors ,Tirupati Government Hospital ,Corona Patients , Biryani, chicken fry, eggs for corona ,Tirupati Government Hospital, own expense
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...