×

இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசும் தடை !

பிரிட்டன்: இந்தியா, அமெரிக்கா நாடுகளை தொடர்ந்து பிரிட்டனும் சீன தொலைத்தொடர்பு
நிறுவனமான ஹூவேய் கருவிகளை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது. சீன ராணுவம் மற்றும்
உலக நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதால் ஹூவேய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின்
கருவிகளை பயன்படுத்த இந்தியா தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவும் தனது 5g
செவிகளுக்கு ஹூவேய் நிறுவனத்தின் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு
தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு 5g தொழில்நுட்ப மேம்படுத்தல் நடவடிக்கையில் ஹூவேய் நிறுவனத்தின் கருவிகளை பயன்படுத்த பிரிட்டன் அரசு தடைவிதித்திருக்கிறது. இது தொடர்பாக பிரிட்டன் டிஜிட்டல் தொழில்நுட்ப செயலர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஹூவேய் நிறுவனம் தேசிய
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பிரிட்டன் மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்களது நெட்வொர்க்கில் இருந்து சீனாவின் ஹூவேய் நிறுவன 5g கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன நிறுவனம் பிரிட்டனில் இருந்தும் வெளியேறுகிறது என்பதை விட வெளியேற்றப்படுகிறது என்பதே நிதர்சன உண்மை என்று தெரிவித்தார்.

Tags : Huawei ,Britain ,India ,China ,US , UK bans Huawei from 5G network
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி