×

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுமதி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோவில் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது. இத்தகைய பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். பக்தர்கள் இன்றி 9 நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ - டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Tags : Hindu Charities Commissioner ,Tamil Nadu ,Srivilliputhur Andal Temple Adipura Festival ,Commissioner ,ceremony ,Adipura ,Srivilliputhur Andal Temple ,Tamil Nadu Hindu Charities , Permission , Hindu Charities,golden chariot, Adipura ceremony , Srivilliputhur Andal Temple
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...