×

இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே தங்களது திறமையை பயன்படுத்தக்கூடாது :உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி :இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி டெல்லி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், உலக இளைஞர் திறன் தினத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.கொரோனா இடர்பாடு நாம் பணியாற்றும் நடைமுறைகளையே மாற்றி அமைத்திருக்கிறது. வேலைவாய்ப்புக் கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்து கொள்வது அவசியம். ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டு விடக் கூடாது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது என்றார். 


Tags : Modi ,occasion ,World Youth Skills Day , Youth, Money, Talent, World Youth, Talent, Day, Prime Minister Modi, Advice
× RELATED நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள்...