×

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: கடத்தலுக்கு உதவியதாக கொச்சியில் மேலும் 3 பேர் கைது...என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை..!!!

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரள  மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவத்தில்  தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் கைது செய்யப்பட்டார். வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ  அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தங்கம் கடத்தும் முக்கிய நபர்களின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த  சில ஆண்டுகளாகவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையங்கள்  வழியாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான தங்கம் தமிழ்நாட்டில் சென்னைக்கு  கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து  வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரும் கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கேரள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kochi ,Kerala ,smuggling ,NIA , Kerala gold smuggling case: 3 more arrested in Kochi for aiding smuggling ... NIA officials take action .. !!!
× RELATED வசந்த காலத்தை வரவேற்கும் வகையில்...