×

பிரதமர் சர்மா ஒலிக்கு இந்து அமைப்புகள் கண்டனம் அயோத்தி நேபாளத்தில் இருக்கா? சரியான லூசுப்பா அந்த ஆளு…!

புதுடெல்லி: அயோத்தி நேபாளத்தில் இருப்பதாக கூறிய அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஒலியை இந்து மத தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் ‘பைத்தியக்காரர்’ என்றும் திட்டியுள்ளனர். நேபாள பிரதமர் கே.பி.ஒலி சமீபகாலமாக சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 பகுதிகளை நேபாள எல்லைகளாக்கி சமீபத்தில் புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை வெளியிட்டார். கல்வான் சம்பவத்தை தொடர்ந்து, இந்திய எல்லையை ஒட்டி படைகளை குவித்து ராணுவ ரீதியாகவும் நெருக்கடி கொடுத்தார்.

இந்நிலையில், மத ரீதியாகவும் கே.பி.ஒலி தற்போது இந்தியாவை சீண்டியுள்ளார். தலைநகர் காத்மாண்டுவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ராமர் ஒரு நேபாளி. அவர் பிறந்த இடமான அயோத்தி கூட நேபாளத்தில் தான் உள்ளது. இந்தியா போலி அயோத்தியை உருவாக்கி உள்ளது,’ என விமர்சித்தார். இதற்கு அயோத்தியில் உள்ள இந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீனாவின் தூண்டுதலால் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஒலியின் ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் கவிழும் என சாபமும் விடுத்துள்ளனர்.

ராமா தல் அறக்கட்டளை தலைவர் கல்கி ராம் தாஸ் மகராஜ் கூறுகையில், ‘‘இந்து மத நூல்களில் சராயு ஆற்றை ஒட்டிய அயோத்தி என்று கூறப்பட்டுள்ளது. நேபாளத்தில் எங்கே இருக்கிறது சராயு ஆறு? இன்னும் ஒரு மாதத்தில் ஒலி பதவி இழப்பார் என சவால் விடுகிறேன்,’’ என்றார். மற்றொரு தலைவர் மஹந்த் பரஹம்ச ஆச்சாரியார் கூறுகையில், ‘‘சர்மா ஒலியே நேபாளி கிடையாது. அந்நாட்டின் வரலாறு சுத்தமாக அவருக்கு தெரியாது. நேபாளத்தை வஞ்சிப்பவர் அவர். சீனா 24 நேபாள கிராமங்களை அபகரித்துள்ளது. அதை ஒலி மறைக்கப் பார்க்கிறார். அவருக்கு எதிராக நேபாளத்தில் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். ஒலி ஒரு புத்தி கெட்டவர்,’’ என்றார்.

* ராமர் இந்தியர் சீதை நேபாளி
ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்  மஹந்த் தினேந்திர தாஸ் கூறுகையில், ‘‘ராமர் இந்தியாவில் பிறந்தவர். சராயு ஆற்றை ஒட்டிய அயோத்தி அவரது பிறந்த இடம். சீதை நேபாளத்தை சேர்ந்தவர். என்றாலும் ராமர் நேபாளி என்பது தவறு. ஒலியின் பேச்சு கண்டனத்துக்குரியது,’’ என்றார்.

Tags : Sharma ,organizations ,Ayodhya Nepal ,guy ,Lusupa , Prime Minister Sharma Sound, Hindu Organizations, Condemnation, Ayodhya Nepal ?, Perfect Luzuba, That Man!
× RELATED வியாசர்பாடி சர்மா நகரில் டாஸ்மாக் கடையில் DVR கருவி திருட்டு..!!