×

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது தடுப்பு மருந்து பரிசோதனை மனிதர்களிடம் துவங்கியது

புதுடெல்லி: இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனமும், ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. இவ்விரு தடுப்பூசிகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வக சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள இரு மருந்துகளும் அடுத்ததாக மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட உள்ளது. இதற்கான இரண்டு கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘‘இரு நிறுவனங்களும் சுமார் 1000 தன்னார்வலர்களுக்கு மருந்தை செலுத்தி பரிசோதிக்க உள்ளன. உலகில் தடுப்பூசிகளை சப்ளை செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா விவகாரத்திலும் தடுப்பூசியை விரைவில் கண்டுபிடிப்பது அவசியமாகும்,’’ என்றார். பாரத் பயோடெக் நிறுவனமும், ஐசிஎம்ஆரும் இணைந்து ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. இதை அடுத்த மாதம் சுதந்திர தினத்தில் இருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : India , India, vaccine, experiment, man, started
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!