×

நியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்

கிறைஸ்ட் சர்ச்: கொரோனா பீதி காரணமாக வீடுகளில் முடங்கியிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் இந்த வாரத்தில் இருந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நியூசிலாந்து அணிகளுக்காக விளையாடும் முக்கிய வீரர்கள், வீராங்கனைகள் இந்த வாரம் முதல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். லிங்கனில் உள்ள உயர் செயல்திறன் மையம் உட்பட 6 இடங்களில் முகாம்கள் நடக்கும்’  என்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் எல்லாம் ஒரே இடத்தில் பயிற்சி பெறுவதற்கு பதில் சமூக விலகலுடன் 6 வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ள பயிற்சி முகாம்களில் பங்கேற்க உள்ளனர். உதாரணமாக சவுத் ஐலேண்டு,  வெலிங்டனை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கேன்டர்பரி மையத்தில் பயிற்சி செய்வார்கள். அதேபோல் மவுன்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவலிலும் பயிற்சி நடக்கும். ‘நாங்கள் திரும்பிவிட்டோம்’ என்று ஆக்லாந்து கிரிக்கெட் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் உற்சாகமாக குறிப்பிட்டுள்ள நிலையில், நியூசிலாந்து வீராங்கனைகள் சிலர் லிங்கனில் பயிற்சி பெறும் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

Tags : locations ,Training camp ,New Zealand , New Zealand player, 6 places, training camp
× RELATED மாணவர்களுக்கு கபடி பயிற்சி முகாம்