×

தமிழ்நாட்டில் முதல்முறையாக எடப்பாடியார் நகர் உருவானது: பெயர் பலகையை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

பெருந்துறை: தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் எடப்பாடியார் நகர்  உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா, காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் பெயரில் பல ஊர்களில் பெயர் பலகைகளை பார்க்கமுடியும். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெருந்துறை பேரூராட்சி 10வது வார்டில், பெருந்துறை ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு எடப்பாடியார் நகர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  பெருந்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜாகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் மோகனரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Edappadiyar Nagar ,time ,Tamil Nadu ,MLA , In Tamil Nadu, for the first time, Edappadiyar Nagar, name plate, MLA.
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...