×

இங்கிலாந்து, கத்தார், துபாயில் இருந்து 668 இந்தியர்கள் மீட்பு

சென்னை: இங்கிலாந்து, கத்தார், துபாய், பக்ரைனில் இருந்து 668 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் சிக்கிய 115 பேர், ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் மும்பை வழியாக நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தனர். அவர்களில் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு ஒரு பெண்ணும், தனியார் ஓட்டல்களில் 114 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கத்தார் நாட்டின் தோகாவில் இருந்து சிறப்பு விமானம் 204 பேருடன் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அவர்களில் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் 157 பேரும், தனியார் ஓட்டல்களில் 47 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து தனியார் சிறப்பு விமானம் 170 பேருடன் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அனைவரும் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். அந்நிறுவனமே அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் 170 பேரையும் இந்தியாவிற்கு அழைத்து வந்தது. அனைவரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர ஓட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பக்ரைனில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை 179 பேருடன் சென்னை வந்தது. அவர்களில் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் 145 பேரும், தனியார் ஓட்டல்களில் 34 பேரும் பஸ்களில் அனுப்பப்பட்டனர்.

Tags : Dubai ,UK ,668 Indians ,Qatar , UK, Qatar, Dubai, 668 Indians, rescue
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...