×

நம் நாடு கடத்தல் மண்டலமாகி விட்டதா? போதைப் பொருள் கடத்தலை வேரறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசுகளுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம் நாடு பயன்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதை பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்ய அவரது மனைவி சித்ரா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப்குமார், இந்த வழக்கில் தொடர்புடையவரின், சகோதரர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான லாரியை கொண்டு சரக்குகளை கையாளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அளவிலான போதை பொருள் தடுப்பு பிரிவுகளை தாமாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறோம். போதைப்இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

* போதை பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் காரணமா?
பறிமுதல்  செய்யப்பட்ட போதைப்பொருளின் இயல்பு, அளவு என்ன? அவை எப்படி அழிக்கப்படுகிறது?, போதை பொருள் கடத்தலில் வெளிநாட்டவருக்கு தொடர்பு உள்ளதா?, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தடுப்பு காவல் சட்டத்தில்  எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?. போதைப்பொருள் நுகர்வோரால் என்ன குற்றங்கள் நடக்கிறது?, இவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?.போதை பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணமா?. மாணவர்களும், இளைஞர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களா?, போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்விகளை  எழுப்பினார்.மேலும் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : country ,kidnapping zone ,ICourt ,governments , Has our country become a smuggling zone ?, Drugs, Trafficking, What is the activity?
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!