×

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 16 லட்சம்  மாணவ, மாணவியர் வரை தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு நடந்த பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விடைத்தாள் திருத்தும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று முன்தினம் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதும் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை மாணவர்கள் சிபிஎஸ்இ இணைய தளமான http://cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : CBSE , CBSE, Class 10, Exam Results, Released Today
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...