×

லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டார கனரக லாரி உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.  
இதில் சங்க நிர்வாகிகள் ஜெயமணி, சேகர், ராமலிங்கம், ஜெர்லின் ஜோசப், சட்ட ஆலோசகர் திலகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகள் அனைத்து வாகனங்களுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.


Tags : Truck owners , Lorry, owners, demonstration
× RELATED வாடகை உயர்த்தி வழங்ககோரி லாரி உரிமையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்