×

காவலர்களுக்கு கொரோனா

புழல்: செங்குன்றம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் 32 வயது காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல், ஏற்கனவே இங்கு பணியாற்றிய 2 பெண் காவலர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.புழல் காவல்நிலையத்தில் 39 வயது தலைமைக் காவலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இருவரும் சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புழல், செங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பீதியடைந்துள்ளனர். புகார்களுக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

Tags : Corona ,guards , Guard, Corona
× RELATED மராட்டியத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி