×

பெற்ற குழந்தையை பிச்சை எடுக்கவைத்த தாய்

திருத்தணி: திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெண் ஒருவர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது திருத்தணி பைபாஸ் சாலையில் பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை வைத்து பிச்சை எடுத்து வந்ததை நேரில் பார்த்தனர். அவர்கள் அந்த பெண்ணிடம் குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு ஒப்புக் கொள்ளாத அந்தப் பெண் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த திருத்தணி போலீசார், அந்தப் பெண்ணிடம் சமரசம் பேசி குழந்தை, தாயை திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் அனுப்பிவைத்தனர்.

Tags : Child received, begging, bereaved, mother
× RELATED அம்மாவை ஏமாற்றியவன் சொத்தில் பங்கு கேட்கலாமா?