×

பரமக்குடி பகுதியில் விபத்து ஏற்படுத்தும் வாறுகால் பாலம்

பரமக்குடி:  பரமக்குடியில் 9 மாதங்களாக வாறுகால் சேதமடைந்து மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது உயிர்பலி வாங்குவதற்குள் நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் முருகன் கோவில் இரண்டாவது தெரு உள்ளது. இந்த தெருவில் 200க்கு மேற்பட்ட  வீடுகள் உள்ளன. இரண்டு தெருக்கள் இணையும் இடத்தில் உள்ள வாறுகால் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாலம் உள்ளது. வாறுகால் பாலத்தில் சாலையின் நடுவே சேதமடைந்து கடந்த ஒன்பது மாதங்களாக மெகாசைஸ் பள்ளமாக உருவாகியுள்ளது.
 
இதனால், இப்பகுதியில் குடியிருப்பவர்கள் பைக், கார்களில் செல்ல முடியாமல் சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பள்ளி குழந்தைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடு வருகின்றனர். விளையாடும் ஆர்வத்தில் இதுவரை 5க்கு மேற்பட்ட குழந்தைகள் வாறுகால் குழிக்குள் விழுந்து காயமடைந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களில் வெளியிலிருந்து வரும் நபர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் குழியில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். உடன் நடவடிக்கை எடுத்து புதிய வாறுகால் அமைக்க வேண்டும். இல்லையெனில் குடியிருப்போர் போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளனர்.

Tags : area ,accident ,Warukal ,Paramakudi , Paramakudi, Accident, Varukal Bridge
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...