×

மக்கள் 100 சதவீதம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்து விடலாம் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி!!

சென்னை : திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதி மக்களுக்கு இணை நோயாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் இந்த வாரம் முழுவதும்  நடைபெற உள்ளது. எண்ணூரில் இன்று காமராஜர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணை நோயாளிகள் மருத்தவ சிறப்பு பரிசோதனை முகாமில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று  பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவொற்றியூர் மணடலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், யூரியா, இதயநோய், ஆக்ஸிஜன் சொரிவு, யூரியா கிரியேட்டின், கருப்பை மற்றும் வாய்ப்புற்று நோய் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  

இதுவரை 15,724 பேர் இணை நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனைமூலம் இணை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படின் ஆரம்பநிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த சிறப்பு முகாம் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2000  படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.  இந்த சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பயனடைய வேண்டும். கடந்த ஒரு வாரமாக சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும் தொற்று எண்ணிக்கை குறைவாகவும் இறப்பு விகிதம் குறையாகவும் உள்ளது.  

தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தனது அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி வெளியே வர வேண்டாம். மக்கள் 100 சதவீதம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்து விடலாம். தொழிலாளர்கள் தங்கள் ஊரிலிருந்து தாங்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலைக்கு பணிக்கும் செல்லும் இ-பாஸ் தொடர்பான பிரச்சனைக்கு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு  நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



Tags : RP Udayakumar ,Corona ,Minister , People, 100 percent, full cooperation, corona, infection, Minister, R.P. Udayakumar, sure
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...