×

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்: மனோஜ் திவாரி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசுகையில், இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கூறினார். அப்படி செய்தால் எந்தவொரு தேர்வாளர் எந்த வீரரின் பெயரை எந்த காரணத்துக்காக தேர்வு செய்கிறார் என்பதை எல்லோரும் பார்க்க முடியும் என குறிப்பிட்டார்.

அத்துடன் அணி தேர்வு நியாயமானதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யவும் உதவிகரமாக இருக்கும் எனவும் கூறினார். வழக்கமாக தேர்வு செய்யப்படாத வீரர்கள் ஏன்? புறக்கணிக்கப்பட்டேன் என்று கேட்டால் தேர்வாளர்கள் வேறு யாரையாவது காரணம் சொல்லுவார்கள் என தெரிவித்தார். தேர்வு விஷயத்தில் யார் மீதும் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் தேர்வு குழு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டியது அவசியமானதாகும் என்று தெரிவித்தார்.

Tags : Indian ,cricket team selection committee ,Manoj Tiwari , Indian cricket team ,selection, committee ,telecast ,Manoj Tiwari
× RELATED தமிழக கிரிக்கெட் அணி தேர்வு குழு அறிவிப்பு