×

சீர்காழி அருகே உப்பனாற்றில் சிக்கிய ராட்சத நண்டு: ஊரடங்கு ஏற்றுமதி தடையால் ரூ.700க்கு விற்பனை

சீர்காழி: சீர்காழிஅருகே உப்பனாற்றில் மீன்பிடிக்கும் போது வலையில் ராட்சத கல்நண்டு சிக்கியது. கொரோனா ஊரடங்கு ஏற்றுமதி தடையால் ரூ.700க்கு விற்பனையானது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் திருக்கோலக்கா தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (55) என்பவர் நேற்று வலைவிரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது வலையில் சிக்கிய ராட்சத கல்நண்டை பிடித்து கரைக்கு கொண்டு வந்தார்.ஒன்றரை கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆனந்தராஜ், மருத்துவ குணம் கொண்ட ராட்சத கல்நண்டை விற்பனைக்காக எடுத்து சென்றார்.

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தடைப்பட்டு உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் போனது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெற்றால் ஒரு கிலோ கல்நண்டு ரூ.2000 வரை விலை போகும். ஆனால் ஏற்றுமதி இல்லாததால் கூடுதல் விலைக்கு விற்க முடியாமல், கிடைத்த வரை லாபம் என நினைத்து ரூ700 க்கு விற்பனை செய்தார். உப்பனாற்றில் பிடிபட்ட ராட்சத கல்நண்டை ஏராளமானவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Tags : saltwater ,Sirkazhi , Situated, uppanaru, crab, curfew
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...