×

மார்க்கெட்டுகளை பாதுகாப்புடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வரின் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: மக்கள் நலன்கருதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த, சில்லரை வணிக வியாபாரிகளின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. திருமழிசையில் சேறும் சகதியுமாக உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் திருச்சி நகரத்தில் உள்ள காந்தி மார்க்கெட் மொத்த வணிக வளாகத்தை தற்காலிகமாக அரசு வேறு இடத்தில் மாற்றி அமைத்திருக்கிறது. மீண்டும் காந்தி மார்க்கெட்டை அங்கு தொழில் செய்து வந்த வணிகர்களின் வாழ்வாதாரம் கருதி மீண்டும் திறந்து இயங்கிட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும், மூடப்பட்ட மொத்த வணிக மார்க்கெட்டுகளில் உள்ளே முடக்கி வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் காலாவதியாகி, முதலீடுகளை முழுவதும் இழக்கும் நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சில்லரை காய்கறி, பூ, பழ வியாபாரிகள் என இத்தொழிலை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடமாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, நிலைகுலைந்து போயுள்ளார்கள். சென்னை கோயம்பேடு மார்க்கெட், திருச்சி காந்தி மார்க்கெட், வேலூர் நேதாஜி மார்க்கெட் மற்றும் பிற மாவட்டங்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து காய்கறி, மளிகை, மீன், இறைச்சி மார்க்கெட்டுகளை அரசு உடனடியாக உரிய வழிகாட்டுதல்களுடனும், பாதுகாப்புடனும் திறந்து செயல்படுத்த அனுமதி அளித்து ஆயிரக்கணக்கான கடை உரிமையாளர்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Edappadi ,Wickramarajah , Market, Security, Open, Chief Edappadi, Wickramarajah, Request
× RELATED தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க...