×

இளம்பெண் தற்கொலை வழக்கில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

செய்யூர்: செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளியை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்யூர் தாலுகா, நைனார் குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சசிகலா (28). கடந்த மாதம் 24ம் தேதி மர்மமான முறையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது, இறப்பில் பெண்ணின் உறவினரான தேவேந்திரன், புருஷோத்தமன் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்களை கைது செய்து விசாரிக்க கோரி பெண்ணின் உறவினர்கள் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பெயரில், வழக்கு பதிவு செய்த செய்யூர் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் புருஷோத்தமன் மதுராந்தகம் காவல் துறை டி.எஸ்.பி முன் சரணடைந்தார். மேலும், தலைமறைவாக உள்ள தேவேந்திரனை கைது செய்யக்கோரி நேற்று செய்யூர் பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று போலீசார் தேவேந்திரனை சென்னையில் கைது செய்து மதுராந்தகம் மாஜிஸ்தி ரேட் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : protests ,Mather Association ,suicide ,Women's Association , Teen suicide, case, Mather Society, Demonstration
× RELATED நாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு...