லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன்

ஸ்பீல்பெர்க்: ஆஸ்திரியா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் 2வது சுற்றில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். ரெட் புல் ரிங் களத்தில் நடந்த இப்போட்டியில், ஹாமில்டன் பந்தய தூரத்தை (மொத்தம் 71 லேப்) 1 மணி, 22 நிமிடம், 50.683 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். சக மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் (+13.719 விநாடி) 2வது இடத்தையும், ரெட் புல் ரேசிங் ஹோண்டா அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+33.698) 3வது இடத்தையும் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை 2 பந்தயங்கள் மட்டுமே நடந்துள்ள நிலையில், போட்டாஸ் 43 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஹாமில்டன் 37 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: