×

லடாக் எல்லை விவகாரம்; நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை

லடாக்: லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அந்த பேச்சுவார்த்தை முடிவில், இருநாட்டு ராணுவமும் எல்லையிலிருந்து விலகி சென்றது. இதனால் அங்கு நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது. இந்நிலையில், நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. எல்லையில் நடந்த மோதலுக்கு பின், ராணுவ தரப்பில் இது நான்காம் பேச்சுவார்தையாகும்.

Tags : commanders ,Talks ,India ,Ladakh ,China , Ladakh, Border Affairs, India, Army Commanders, Negotiations
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...