×

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்கள் - அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: மகளிர் சுய உதவிக்குழுக்களில் விரைவாக கடன் கிடைக்காத காரணத்தால் குடும்பத்தலைவிகள் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் வாங்குகின்றனர். ஆனால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்றும், இந்த சிக்கல்கள் பற்றி மாவட்ட ஆட்சியர்களிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் கிராமப்புற பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் பணபுழக்கமின்றி முடங்கியுள்ளனர்.

மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்களும் வியாபாரமின்றி பாதிப்பில் உள்ளது. இந்நிலையில் 20 பேர் கொண்ட மகளிர் குழுக்களிடம் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கடன் வழங்குகின்றன. அவ்வாறு கடன் பெற்றவர்கள் கொரோனா பேரிடரால் வருமானம் இன்றி தவிப்பதால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் கடன் வசூல் என்ற பெயரில் குடும்ப பெண்களை மிரட்டும் நடவடிக்கையில் நிதி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பல்வேறு முறைகேடுகளிலும் நிதி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பல்லாயிரம் குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காலத்தில் மைக்ரோ பைனான்ஸ் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Women ,Womens Self Help Group , Womens Self Help Group, Micro Accounting
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...