×

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டதா? மத்திய அரசு புகாருக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவிகிதத்தை கூட பயன்படுத்தவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞ்சர் சூரியப்ரகாசம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவிகிதத்தை கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருந்ததை மனுதாரர் சூரியப்ரகாசம் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அவரது வாதத்தை மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞ்ர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து, மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கவுன்சிலிங் மையங்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவாகும்.


Tags : migrant workers ,High Court ,government ,Tamil Nadu , Migrant Workers, Food Grains Central Government, Tamil Nadu Government, High Court
× RELATED வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு...