×

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை..: பாதுகாப்பு படையினர் அதிரடி

அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கயிருப்பதாக  பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் , ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபில்ஸ் பிரிவு மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே 6 மணிநேரத்திற்கும் மேலாக மோதல் நடந்தது.  இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் முதலில் சுட்டு கொல்லப்பட்டான்.  

தொடர்ந்து நடந்த மோதலில் மற்றொரு பயங்கரவாதி பலியானான். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய முதற்கட்ட விசாரணையில், ஒருவன் உள்ளூர் தீவிரவாதி என்பதும் மற்றொருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.   இதுகுறித்து பேசிய ஜம்மு-காஷ்மீரின் டி.ஜி.பி. தில்பாக் சிங், இவர்கள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தினை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை நிறைவடைந்துள்ளது என கூறியுள்ளார்.

Tags : terrorists ,Jaish-e-Mohammed ,Security forces ,two ,district ,Kashmir ,Jammu ,Anantnag ,Anandnag , Jammu and Kashmir Anantnag, Jaish-e-Mohammed terrorists, killed
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்...