×

கொரோனா தொற்று எதிரொலி: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் மூடல்!!!

திருவள்ளூர்:  திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று ஒருநாள் மட்டும் மூடப்பட்டுள்ளது. திருவள்ளூரில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை பல்வேறு அலுவலகங்கள் கொரோனா தொற்றினால் மூடப்பட்டுள்ளன. ஏனெனில் கொரோனா தொற்றானது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6655ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2514 பேராக உள்ளது. இதில் பூரண குணமடைந்து 4014 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றினால் திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. இதனால், கொரோனா தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் ஒரு பகுதியாக அனைவரும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனைதொடர்ந்து, கொரோனா தொற்று உறுதியானவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் வசித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : office ,Tiruvallur Collector ,Coronation epidemic ,Thiruvallur Collector , Coronation epidemic echoes: Thiruvallur Collector
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...